பெர்ப்ளெக்சிட்டி CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் – 'ரீல்ஸ்' பார்ப்பதை விட்டுவிட்டு திறன்களை உருவாக்குங்கள் என்ற அறிவுரை

பெர்ப்ளெக்சிட்டி CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் – 'ரீல்ஸ்' பார்ப்பதை விட்டுவிட்டு திறன்களை உருவாக்குங்கள் என்ற அறிவுரை
AI தேடுபொறி 'Perplexity'-இன் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ், இன்றைய இளைஞர்களுக்கு முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார்:
"ஸ்க்ரோல் பண்ணாதீங்க, உருவாக்க ஆரம்பியுங்க."
இளைஞர் கண்டுபிடிப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், இளம் தலைமுறையினர் Instagram, YouTube போன்ற சமூகவலைதளங்களில் 'ரீல்ஸ்' பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நீங்கள் வாழ்வின் முக்கியமான காலத்தை சாப்பிடுவதிலும் பார்த்து மகிழ்வதிலும் செலவழிக்கிறீர்கள். அதே நேரத்தில் குறைந்தபட்சமாகக் கூட கற்றல், நிரலாக்கம், வடிவமைப்பு அல்லது எழுத்து போன்றவற்றை பயில்ந்தால், உங்களை யாரும் நிறுத்த முடியாது.”
அவர் மேலும், AI கருவிகளைப் பயன்படுத்தி விரைவாகக் கற்றுக்கொள்ளுங்கள், சிறிய திட்டங்களை உருவாக்குங்கள் மற்றும் ஆர்வமாக இருங்கள் என்றார். தொழில்நுட்ப உலகம் பின்தொடர்பவர்களை அல்ல, திறன்களை மதிக்கிறது என்பதையும் அவர் தெரிவித்தார்.
அவரது வார்த்தைகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, டிஜிட்டல் பழக்கங்கள் எதிர்காலத்தைக் கட்டமைக்கின்றன என்பதை நினைவூட்டின.